Thursday, June 7, 2018

நீரின் ஞாபக உணர்வு - Masaru Emoto


உங்களுக்கு அறிமுகமில்லாத எவர் வீட்டுக்குப் போனாலும் கூட உங்களை வரவேற்று அமரச் செய்தவுடன் உங்களுக்கு அந்த வீட்டில் சேமித்து வைத்து இருக்கும் ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் அல்லது ஒரு டம்ளர்த் தண்ணீர் வழங்கப்படுகிறது .அதில் நீங்கள் கொஞ்சமேனும் பருகித்தான் ஆகவேண்டும் .வெளியே இருந்து வருகிறோம் வெய்யிலுக்குத் தருகிறார்கள் என்றுதான் உங்களைப் போல நினைத்துக்கொண்டு இருந்தேன்.அதாவது மாசறு எமாட்டோ Masaru Emoto என்ற ஜப்பானிய நீர் மூலக்கூறு ஆராய்சியாளரின் கட்டுரை வாசிக்கும் வரை.அப்புறம்தான் தெரிகிறது மனித எண்ணங்களின் தன்மை நீர் மூலக்கூறு பாதிப்பை ஏற்படுத்தி அதற்குரிய வடிவத்தை தருகிறது என்பதை.அப்படியானால் உங்களுக்குக் கொடுக்கப்படும் தண்ணீர் உங்கள் தாகத்திற்கு மட்டுமல்ல அந்த வீட்டினரின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உங்களை இணக்கமாக்கிக் கொள்ளத்தான்.

அதெப்படி இது சாத்தியம் ? இது நிரூபிக்கப் பட்டதா ?



ஆமாம். ஒரு இடத்திலிருந்து மட்டுமல்ல உலகம் முழுவதுவும் உள்ள முக்கிய நதிகள்,ஏரிகள் மற்றும் குழாய் நீர்களைக் கூட விட்டு வைக்கவில்லை.அத்தனையும் எடுத்து ஒரு பாட்டிலில் தனித்தனியே சேமித்து அந்தப் பாட்டில்களில் வெவ்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு மாசறு எமாட்டோவால் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது .

முதல் சோதனை உள்ள நீருக்கு அருகே சிடி மூலம் பீத்தோவானின் சிம்பொனி Pastoral ( Symphony No. 6 ) மொசார்ட்டின் G minor (Symphony No. 40) போன்ற இசையைப் பரப்புவது.

அடுத்த சோதனை பாட்டிலில் உள்ள நீரில் நல்ல பாசிட்டிவ் எனெர்ஜி உள்ள திபெத்திய Prajnaparamita Sutras மந்திரங்களைச் சொல்லுவது,

  அடுத்துச் சேமிக்கப்பட்ட பாட்டில்களின் வெளியே LOVE YOU , THANK YOU, WISDOM , TRUTH போன்ற வார்த்தைகள் மற்றும் சூரியன்,டால்பின்,யானை,தாமரை போன்ற ஃபோட்டோக்களை ஒட்டி வைப்பது

    மேலும் முத்து ,பவளம்,போன்ற இயற்கை கற்களும் நீருக்குள் இட்டு .

  இப்படித் தனித்தனியே சேமிக்கப்பட்ட நீரை மைனஸ் 25 முதல் மைனஸ் 30 வரை உறைய வைத்து ஐஸ் கியூப்களாக்கி அந்தக் கியூப்களை sequence photographs (with a magnification of 100X too 200X ) மூலம் பெரிது படுத்திப் பார்க்கும் போது அம்மாதிரி சேமிக்கப்பட்ட நீரின் மூலக்கூறுகள் அந்த உள்வாங்கிக் கொண்ட தன்மைக்கு ஏற்ப அதன் ஹைட்ரஜன் ஆக்சிஜன் அணுக்கள் இணைந்து அழகிய clusters கொத்துப்போன்ற வடிவங்களும் crystals படிக போன்ற தனித்துவமானத் தோற்றங்களை வெளிபடுத்தின.அதாவது நீருக்கு அதனோடு தொடர்பு கொள்ளும் எதனையும் நினைவில் வைத்து அதனை வெளிப்படுத்துகிறது என்பதே இந்த ஆராய்ச்சியின் வெளிப்பாடு . 




          இதே போல மேலே சொன்ன எல்லாச் சோதனைகளின் எதிர்மறைத் தன்மையுடைய மோசமான இசை,அதிருப்தியான வார்த்தைகள்,படங்கள் வைத்தும் சோதிக்கப்பட்டன அவற்றை உள்வாங்கி வெளிப்படுத்திய நீரின் மூலக்கூறுகள் வெளிப்படுத்திய வடிவமும் இல்லாத கலங்களான வடிவங்களாக வெளிப்படுத்தின. 


நம் கலாச்சாரத்தில் நீருக்கும் அதனோடு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நம் பழம்பெரும் நூல்கள் அஸ்டாங்க ஹ்ருதயம் போன்ற நூல்கள் பேசுகிறது. தெய்வீகம் பொருந்தியதென நம்பப்படும் கோயில் குளத்து நீர், புனித ஆற்று நீர், கோயிலில் அர்ச்சகர்த் தரும் நீர், பால் போன்றவைகளை நாம் தீர்த்தம் அல்லது புனித நீராக மதிக்கிறோம். 

நம் பூமிப்பந்தின் 24,900 மைல் (40,070 கி.மீ) சுற்றளவில் 72 சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது.அதே போல மனித உடம்பு ஆண் 60%,பெண் 55%,சிறுவர்கள் 65%.குழந்தைகள் 75% நீரால் நிரப்பப் பட்டுள்ளது ( Updated June 01, 2018 By Anne Marie Helmenstine, Ph.D..) இப்படி இருக்கும் மனித உடலின் நீர்தன்மை அவர்கள் எண்ணத்தால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதைக் கணக்கிட்டுகொள்ளலாம். 


அதனால்தான் முனிவர்கள் ரிசிகள் கூட பித்தளை ,செம்புப் பாத்திரத்தில் சேமித்து வைத்து அப் பயதைன்படுத்தினார்கள்.அந்த உலோகங்களுக்கு நீரின் பதிவுகளை நீக்கும் குணம் இருப்பதாக அவர் அறிந்து இருந்தார்கள்  வைத்து இருந்தார்கள்

யார் வீட்டிலாவது தண்ணீர் கொடுத்தால் வாங்கி வைத்து விட்டு நீங்கள் போன வேலையை முடித்து விட்டுப் பிறகு அருந்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள உலகின் நீர் மருத்துவர் என்றழைக்கப்பட்ட Masaru Emoto வை நினைத்துக்கொள்ளுங்கள் . 

No comments:

Post a Comment