Saturday, May 28, 2016

சொல்லால் மட்டும் நம்பாதே !


                   ஏதாவது உடம்புக்கு வந்தால்தான் நாம் மருத்துவமனைத் தேடுவோம் . வரும் முன் காப்போம் என்பது நமது வாழ்வின் தொலைக்கப்பட்ட உண்மை .   வாழ்த்துவதன் மூலம் பெறப்படும் அற்புதமான பயனை ஆராய்ந்து அறியும் தெளிவில் குறைபாடுள்ளோர்களாக நம்மில் சிலர் இருந்து வருவது வருத்தம் தருகிறது .”பின்னம் கேட்டால் முழுமைத் தரும்”( Fraction Demands Totality will supply ) என்ற குருவின் மந்திரச்சொல் தங்கள் வாழ்வை மிக எளிதாக்கும் என்பதில் உறுதியாக இல்லாதவர்களாக இருக்கிறார்கள் .குருவின் வார்த்தையின் நுட்பம் புரிந்துணரந்துக் கொண்டவர்கள் வாழ்வின் மேன்மையைத் தன் வாசலுக்குக் அழைத்து வர முடியும் .எங்கும் தேடிப்போக வேண்டாம். 

சுமார் நான்கு வருடம் குருவின் பணியில் இருக்கும் ஒரு நபரை இரண்டு வருடமாகச் சந்தித்து வருகிறேன் .எப்போதுமே எதையோ தொலைத்தவராகக் கடந்த சில மாதங்களாக இருந்து வந்தார் .விசாரித்த போது மெல்ல மவுனத்தைக் கடைபிடித்தார்.என்னை விடவும் ஒரு பங்கு மூத்தவர் . அவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றவர் மட்டுமில்லாமல் திட்டமிட்டு வாழ்பவர்.அவருக்கு மனதில் ஏதோ ஒரு சொல்ல முடியாத குடும்பப் பிரச்சனையின் வலியைச் சுமக்கிறார் என்பதைத் தொடர்ந்து சந்தித்த சில வாரங்களில் உணர்ந்து கொண்டேன் .அவரை மையமாக வைத்து ஒரு நாள் வாழ்த்தின் பயனைப் பற்றி சிந்தனை உயர்வைப் பேசிய போது ,அவர் கேட்டார் நாம் வாழ்த்தினால் எனக்கு ,என் மனைவி, மகன் ,ஆகிய எல்லோருக்கும் எல்லாமும் நடந்து விடுகிறது .ஆனால் என் மருமகள் விசயத்தில் அது நடப்பதில்லை என்றார் .இது அவரை மீறி அவரிடமிருந்து வெளிப்பட்டது .நான் மெல்ல ஏன் என்றேன் .அவள் நம் மன்றத்திற்கு வருவதில்லை அதனால் இருக்கும் என்றார்.அப்படியானால் உங்கள் மனைவி வருவதில்லையே அவர்களுக்கு மட்டும் எப்படி வாழ்த்து வேலை செய்கிறது என்றேன் மறுபடியும்.அதற்கு அவர் ஒருவேளை என் மகன் வாழ்த்தினால் நடக்குமோ என்றார். 


பிறகு அவரின் (அனுபவித்துத் தீர்க்க வேண்டிய) பிரச்சனை இதுதான்.அவர் மகனும் ,மகளும் சமீபத்தில் விவாகரத்துக் கோரி (As per rule of Section 13B of the HMA Act 1955 provides for Divorce by mutual consent, period of separation is 1 year ) பிரிந்து வாழ்கிறார்கள் .மகனைச் சேர்ந்து வாழச்சொன்னால் சரி என்கிறார் ஆனால் மருமகளோ ஒத்துவரவில்லை.இதனால்தான் அவரின் வாழ்த்தின் மேல் உள்ள நம்பிக்கைச் சரிந்து நிற்கிறது ! . 

            சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய் என்பதை நினைத்துப் பாருங்கள் உங்கள் பதிவின் தொடர் உங்கள் மகன் . அதனால் உடனே வேலை செய்கிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு.அதுவே உங்கள் மகனின் பதிவின் இன்னொரு பகுதிதான் உங்கள் மருமகள் .பிரித்துப் பார்க்காதீர்கள்.இருவரும் ஒரு நாணயத்தின் இரு பகுதி .இருவரும் சேர்ந்துதான் அவர்கள் வாழ்வின் முழுமையை அடைய முடியும். அவர் இந்தப் பூமிக்கு எந்த வேலையோடு பிறப்பு எடுத்து இருக்கிறாரோ உங்கள் மகன் , அது வேலைக்கு உங்கள் மருமகள் பதிவும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் .நம் வாழ்த்து இரண்டு பேருக்கும் போய்ச் சேரும்.இதில் பேதமில்லை.ஆனால் யார் பதிவில் சேர்ந்து வாழும் நீதியும் அறிவின் தெளிவில் முரண் இருக்கிறதோ அவர்கள் பதிவு மாறுவதற்குச் சில காலம் அதிகம் எடுத்துக்கொள்ளும் .நீங்கள் உங்கள் மகனைத் தினமும் பார்க்கிறீர்கள், வாழ்த்துகிறீர்கள் மாறுபாடு விரைவாக நிகழ்கிறது அதே போல் உங்கள் மருமகளை மனக்கண் முன் நிறுத்தியோ அல்லது இருவரும் இணைந்திருக்கும் திருமணக்கோலத்தைப் பார்த்தோ தினமும் நம்பிக்கையோடு வாழ்த்துங்கள். மிக விரைவில் பிறகு மாற்றத்தை உணர்வீர்கள் என்றதும் சற்று நம்பிக்கைப் பிறந்த முகத்துடன் விடைப் பெற்றார்.


இதை எங்களோடு கேட்டுக்கொண்டு இருந்த ஒருவர் அவர் விடைபெற்றுப் போனதும் என்னிடம் சந்தேகமாகக் கேட்டார்ப் பாருங்களேன் ஒரு கேள்வி ,அப்படியும் அந்தப் பெண் சேர்ந்து வாழ விருப்பம் இல்லையென்று சொன்னால்...என்றுத் தயங்கித் தயங்கி இழுத்தார் இருவருக்கும் ஒத்துப்போகாத கருவமைப்பு வேலை செய்கிறது என்பதை அந்த வாழ்த்தே அவர்களுக்கு உணர்த்தும் எல்லா ஆழமான நம்பிக்கை உடைய வலிமையான எண்ணங்கள் கொண்ட வாழ்த்தும் அற்புதமான நிலத்தில் விழுந்த விதைப்போல விதைத்த நாம் மறந்தாலும் விதைத் தன் வேலையை இயற்கையின் மாறாத இயல்பூக்கக் ( மனம் ஆழ்ந்து எதை நினைக்கிறதோ அதுவாகவே மாறும். ) கட்டளைக்குக் கட்டுப்பட்டுப் பலன் தராமல் போகாது என்றேன் .இதைக் கேட்டவர் மௌனமானார்.

No comments:

Post a Comment