Thursday, August 24, 2017

'சண்டையிடு' அல்லது 'ஓடிவிடு ’.Fight of Flight


        சமையல் கத்தியே இன்னும் சரிவரப் பிடிக்கத் தெரியாதவனிடம் சாமுராய்க் கத்தியைக் கொடுத்துச் சண்டைக்கு நிறுத்தியது போல ஆகிவிட்டது இன்றைக்கு எனக்கு பேசக் கொடுக்கப்பட வகுப்பு.இரண்டு நாளைக்கு முன் திருப்பூரின் மிகப் மிக முக்கியமான அறக்கட்டளையிலிருந்து , ”மன அழுத்த மேலாண்மைஎன்ற வகுப்பு எடுக்க அழைப்பு வந்தது.மிகச் சிறந்த ஆசிரியர்களை மட்டுமே அழைக்கும் அந்த அறக்கட்டளையில் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைப்பது மிகப்பெரிய சந்தோசம் .அதுவும் என்னைப்போல ஆரம்ப நிலைத் துணைப்பேராசிரியர் பயிற்சி நிலையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய கௌரவம் !

      ஆனால் அந்த வகுப்பு அது யார் முன் எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்ன போதுதான் என் பேஸ் மட்டம் வீக்காகி விட்டது. காரணம் அரசு இடைநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சிஇரண்டு நாள் முகாமில் இந்தத் தலைப்பில் பேச வேண்டுமாம். வாழ் நாளெல்லாம் எவர்கள் முன்னாடி ஒளிந்து கொண்டு திரிந்தோமோ அந்த ஆசிரியர்கள் முன்னாடி பேச வேண்டுமே என்பது மிகப்பெரிய சவால் என்று தோணியது.இது மட்டுமல்ல அந்த அறக்கட்டளை மூத்த பேராசிரியர் ஒருவரால் அங்கு பேசும் விசயங்கள் பதிவு செய்யப்பட்டு உற்றுக் கவனிக்கப்படுகிறது.தவறுகள் விவாதிக்கப்படுகிறது.அறிவுறுத்தவும் படுகிறது . இப்போது தலைப்பே என்னை சண்டையிடுகிறாயா ? என்று கேட்டது. 



        குரு மஹான் வேதாத்ரி மகரிசி சொல்லிக்கொடுக்காத, பேசாத, தொட்டுக்காட்டாத விசயங்களே இல்லை. விஞ்ஞான உலகம் ஃபெர்மியான்கள் ,போஸான்கள் என்ற அணுவிற்கு விசை தரும் துகள்களைத் துழாவிக்கொண்டு இருக்கும் போது வெற்றிடத்தில் எப்படித் துகள் உருவானது அது எப்படி அலையானது என்ற அண்ட வெளி ரகசியத்தில் துவங்கி இன்று மனிதப் பரிணாமத்தின் முழுமைப்பேறு வரை விரித்துப் பேசி விட்டார். ஆனால் என் பயம் என்னுடையது.இத்தனை நாள் கை கட்டி பிரம்புக்கு பயந்து வாழ்ந்த ஆசிரியர்கள் முன்னின்று பேசுவது எப்படி என்பதுதான் அது .மேடையும் , மக்களும் அதேதான் ஆனால் ஆசிரியர்கள் என்றால் ஒரு பயம் ஆழ் மனதின் பாகுபலியாய் உட்கார்ந்து கொண்டு இதுவே என் சாசனம் என்று கட்டளையிடுகிறதே என்ன செய்வது

           இரண்டு நாள் என்னிடம் உள்ள குருவின் நூல்கள் ,அவர் பேசிய உரைத்தொகுப்பு, நூலகப் புத்தகங்கள் அனைத்திலும் உள்ள குறிப்புகளையும் , இணையத்தின் மூளை முடுக்கெல்லாம் துலாவித் சேகரித்தேன். ஆனால் எப்படி இந்தப் பேச்சை 30 நிமிடத்திற்குள் பேசித் தெளிவு படுத்துவதற்கான வடிவமைப்பு கடைசிவரை சவாலாக இருந்தது.என் போன்ற ஆரம்பப் பேச்சாளனக்கு ( ! )  நம்மை பேச வாய்ப்பு அளித்து அழைத்தவர்களுக்கு நம் சிந்தனையுரைத் தெளிவாகத் திருப்தி படுத்தினால்தான் அடுத்த அழைப்பு இன்னும் முக்கிமானதாகக் கிடைக்கும் .இப்படித்தான் எனது அறக்கட்டளையில் பேசத்தெரியாது என்பதற்காகப் பாடத்தில் அதிகம் விரிவாக இல்லாத நாடி சுத்தி தண்டு வட சுத்தி தலைப்புகளை மட்டுமே சுத்திச் சுத்திக் கொடுத்தார்கள் .ஒரு கட்டத்தில் எனது பலவீனத்தை உணர்ந்தேன் .எப்போதுமே நம் மேடை ஏறிப் பேசும் நமக்குத் திருப்தித் தரவேண்டும்.அது கீழே கேட்கவிருக்கும் மக்களைப் போய்ச் சேரவேண்டும் இதல்லாத பேச்சு அடுத்தவர்கள் நேரத்தைப் பறிப்பதற்கான  பாவம் என்று உணர்ந்தேன். 

         தியானத்திற்கு முன் செய்யப்படும் அல்லது தியானத்திற்கு முன் உப தியானமாகக் கருதப்படும் இந்த நாடி,தண்டுவடச் சுத்திப் பயிற்சிகளின் முக்கியதுவத்தைப் பல கோணத்தில் தேடத் தொடங்கிய போதுதான் அள்ள அள்ளக் குறையாத ஆன்மீக ஊற்று வெளிப்படத் தொடங்கியது.வெறும் எழுபத்தி ஈராயிரம் நாடிகள் உடலில் இருக்கிறது என்பது மட்டுமே பேசிக்கொண்டு இருந்த எனக்கு அது படைப்பின் இருமை நிலையின் குறியீடாக ஈடா மற்றும் பிங்களா என்பது என்ன இந்த இருமை நிலையை நாம் சிவா மற்றும் சக்தி என்று ஏன் உருவகப்படுத்துகிறோம். சக்தி உடல் மூலமான நாடிகள் ஆமை வடிவத்தில் எங்குத் துவங்குகிறது தொடங்கி எங்கு முடிகிறது ? அதன் வடிவம் என்ன ? அதனுள் பயணிக்கும் சக்தி ஓட்டத்தை எப்படி உணர்வது போன்ற ஆழங்கள் பிடிபட்டது.இந்த ஆழம்தான் மேடையில் தத்தித் தத்திப் பேச்சாற்றலைத் தரிசித்துக் கொண்டு இருந்த என்னை வாய்ப்பளித்தவர்களுக்குக் வெளிச்சமிட்டுக் காட்டியது. 


     ஆனால் இங்குப் பிர்ச்சனை வேறாயிற்றே ? கற்றறிந்த ஆசிரியர்கள் முன்னால் பேசுவதற்கு நிறைய தயாரிப்புகள் வேண்டும் பேசும்போது அது நூல் தொடர்பாய் கருத்தோடு பயணிக்க வேண்டுமே ? என்ன செய்வது தொய்வான இடங்களில் நகைச்சுவையும் கலந்து நிற்க வேண்டும்.மிகுந்த குழப்பத்தால் இந்த வாய்ப்பு இந்தப் பேச்சை என் குறைவான அனுபவ திறத்தால் வடிவமைக்கப் பிடிபடவில்லை. எப்போதும் போலக் குருவை நம்பினோர் கைவிடப்படார் என்ற வாக்குப்படி அவரிடமே ஒப்படைத்து என்னைச் செலுத்த வேண்டிக்கொண்டேன்.மதியம் 2.10 க்கு மேடை கொடுக்கப்பட்டது. 

கொஞ்சம் வரலாறு ...
ஆதி மனிதன் குகையில் வாழ்ந்த காலத்தில் துவங்கி,1700 களில் துவங்கிய தொழிற் புரட்சி அதனால் வேட்டையைத் தொழிலாகக் கொண்டு உருவான மனித மூளையின் அடுத்தக் கண்டுபிடிப்பான 1800-1900 களில் உருவான முக்கியமான விளையாட்டுக்கள் 

கொஞ்சம் அறிவியல் ...
பிறகு நடந்த அறிவியல் கருவிகளின் கண்டு பிடிப்புகளின் தொலைந்து போன மனித உழைப்பும் அதோடு ஒத்துப் போகாத மூளை ரசாயன அமைப்பின் போராட்டமும் மனித உடலியல் சோர்வுக்கு என்றதோடு

கொஞ்சம் அன்மீகம் ...
வேதாத்ரி என்ற தத்துவ ஞானி வரும் முன் காப்போம் என்ற முக்காலச் சிந்தனையில் உருவாக்கிய உடற்பயிற்சியான கால்பயிற்சியின் -   தசைநார் ,மூச்சுப்பயிற்சி ,கபாலபதி, அக்குப்பிரசர் ,உடல்தளர்த்தல்,  போன்ற பயிற்சிகள் மூலம் குறைக்கப்படுகிறது என்றும் முக்கியமாக காயகல்ப பயிற்சி பயன் பற்றியும்,

     மன அழுத்தம் தரும் முக்கிய நாளமில்லாச் சுரப்பியான அட்ரினல் மற்றும் அதன் பகுதியான கார்டெக், மெடுல்லாச் சுரப்புகள் நம்மை நம் உடலின் ஆளுமைகள் பற்றிப் சொல்லி அது எப்படிப் பஞ்சேந்திரிய , நித்தியானந்த , ஒன்பது மையத் தவங்களிலும் மற்றும் சாந்தி யோகத்தில் எப்படி ஊக்கம் பெறுகின்றன என்பதோடு

        இதெல்லாம் தாண்டி அகத்தாய்வில் கவலை ஒழித்தல் மூலம் அனுபவித்துத் தள்ளிபோட்டு,அலட்சியம் செய்து ,உடனடியாகத் தீர்க்க வேண்டிய கவலைகளின் அகங்களைத் பற்றித் தொட்டுக் காட்டிக்கொண்டு இருக்கும்போதே கொடுக்கப்பட்ட முப்பது மணித்துளிகள் முடிந்தது. 



         இந்த வாய்ப்பின் மூலம் தேடிய விசயங்களில் இன்னும் பல மேடைகளுக்கான கருத்துக்கள் நிறையக் கிடைத்தது.இன்றைய இந்திய மக்களில் 2% மனநோயால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும்,இந்த வரிசையில் 20% மறைமுகமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது.அதோடு இதன் அறிகுறிகள்,படபடப்புத் துவங்கி மரணத்தின் வாசல் வரை இழுத்துச் செல்லும் வாய்ப்புகள் மிகவும் பயமுறுத்தியது. மன அழுத்த மேலாண்மைக்கு வழங்கப்படும் நவீன விலைமிகுந்த WHO ஆல் அங்கீகரிக்கப்படாத மருந்துகளின் பக்க விளைவுகள் இன்னும் பயங்கரம் !

          மேலம் சில நல்லவிசயங்களும் கிடைத்தது . மன அழுத்தம் குறைக்கும் உணவு முறைகளில் கீரைகள், பால் , ஆரஞ்சுப் பழம், டார்க் சாக்லெட் ,கார்ன் பிளக்ஸ் ப்ளுப் பெர்ரி , இன்னும் பல உணவுகளையும் அதன் வைட்டமின்கள், ஆண்டி ஆக்சிடன்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இது மட்டுமா? மன அழுத்தம் குறைக்கும் தெரபிகளான மேக்னடிக்,ஸ்பா,ஐஸ்,ஸ்பைனல் கார்டின் மேல் நுண்ணிய நீரைப் பாய்ச்சி அடிப்பது ,நீராவிக் குளியல்,களிமண் பூச்சு,பற்கள் இல்லாத மீன்களைக் கொண்டு மூளைக்கு எண்டார்ஃபின் சுரப்பைத் தூண்டுவது,எண்ணெய் மசாஜ்,ரெஃப்லெக்சாலஜி,

        மேலும் மன அழுத்தம் மெல்ல மெல்லப் போக்கும் வீட்டு வளர்ப்புச் செல்லப்பிராணிகள் மற்றும் தாவரங்களான லெமன் கிராஸ்,மின்ட் துளசி,கிரீன் ரிலாஸ் என்று பட்டியல் நீண்டன. 

        ஆனால்  இவற்றில் மன அழுத்தம் குறைக்கும் யோகாசனங்கள் ,முத்திரைகள் பேசாமல் விட்டுவிட்டேன் என்பது என் குறை.அதோடு நமக்குப் பிடித்த இசையையும் சிலமனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்படச் செய்யும் ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி, அம்சத்வனி, பீம்பிளாஸ்,முகாரி , நாதநாமக்கிரியா போன்ற  ராகங்களைக் கேட்பதால் உடலில் ஹார்மோன் கார்டிசோல் அளவை இது குறைகின்றது . இதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது என்பது பற்றிக் குறிப்புகள் எடுக்காமல் போய் விட்டேன் .

அடுத்த மேடை அதைப் பேச வைக்க குருவருள் வாய்ப்புத்தரும்.



No comments:

Post a Comment