உங்கள் தொகுதியில் யார் வேட்பாளர் என்று கேட்டால் தெரிகிறதோ இல்லையோ இன்றைக்கு வெப்ப நிலை எவ்வளவு என்று எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது .யாரைப் பார்த்தாலும் அப்பா என்னா வெய்யிலு எண்று அலுத்துக்கொள்கிறார்கள் வங்கிய கடனுக்குப் பயப்படாதவர்கள் கூடச் சூரியத்தேவனுக்குப் பயப்படுகிறார்கள் .ஐஸ்க்கிரீம் முதல் மோர்,இளநீர் ,நொங்கு ,சர்பத் ,இதமாகக் கிடைப்பதெல்லாம் கடவுளாய்த் தெரிகிறது இப்போது !
காலம் காலமாகச் சூரியனின் முக்கியத்துவம் உணர்ந்த உலகின் நாகரிகங்களில் சூரியனை மதித்தனப் போற்றின. எகிப்தியர்கள் ரா எனவும்,மெக்சிகோவின் அஸ்டெக் நாகரிகத்தினர் டோனாடியு என்றும், கிரேக்கர்கள் ஹீலியோஸ் என்பதாகவும், இன்கா நாகரிக மக்கள் இன்ட்டிஎன்றும்சூரியனை அவரவர் மொழிகளில் வழிபடுகின்றனர்.நம் இந்தியக் கலாச்சார அடிப்படை அறத்தைச் சொல்லும் வேதங்கள் சூரியனை வேதத்தின்மொத்தவடிவமாகப் பார்கிறது .காலை வேளையில் ரிக்வேதமகவும் மதியத்தில் யஜூர் வேதமாகவும் மாலை வேளையில் சாமவேத வடிவமாகப்பார்கின்றனர் !
தமிழ்ச் சமூகதிற்குச் சொல்ல வேண்டியதில்லை இயற்கையோடு ஒன்றிப்பிறந்ததுஅது தன் பங்குக்குத் தை மாதம் பொங்கல் விழா எடுக்கிறது. இப்படிச்சொல்லிக்கொண்டே போனாலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, ஏன் சூரியக்கடவுள் இப்படி வறுத்தெடுக்கிறார் என்ற ஆதங்கம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூடக் கொளுந்து விட்டு எறிகிறது .அப்படி என்ன சூரியக்கடவுளுக்கு இந்தப் பூமி மேல் ஓர வஞ்சனை ? இயற்கை அப்படிப்பட்டஎண்ணம் கொண்டதாகவா இருக்கும் ?
இதே கேள்வியை உலகச் சமுதாயச் சேவா சங்கத்தின் ஸ்தாபகர் வேதாத்ரி மஹரிசியிடம் ஒரு முறை கேட்ட போது அவர் சொன்னார் ,
’சூரியனிலிருந்து ஒளி,வெப்பம் வரவில்லை அலைதான் வருகிறது.அந்த அலை பூமியிலுள்ள பொருள்களின் மீது மோதும்போது அந்தப் பொருட்களிலுள்ள தன்மைக்கேற்ப ஒளியும், வெப்பமும் உண்டாகின்றன என்றார்.
அப்படியானால் பூமியின் வெப்பத்திற்குச் சூரியன் காரணமில்லையா ?
மஹரிசி சொல்கிறார்
எந்தப் பொருளிலிருந்து அலை கிளம்பினாலும் அந்த அலை அந்தப் பொருளின் தன்மையைக் கொண்டிருக்கும். சூரியனுடைய அலையில் சூரியனுடையதன்மையான ஒளியும், வெப்பமும் அடங்கியுள்ளன . எந்தப் பொருளின் மீது மோதுகின்றதோ அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மூலப்பொருளின்தன்மை இங்கே பிரதிபலிக்கிறது. ஒளியினுடைய பிரதிபலிப்பு உண்டாகும் போது தானாகவே வெப்பமும் உண்டாகிறது.
உதாரணமாக,
இரும்பில் படும்போதும், கல்லில் படும்போதும், கண்ணாடியில் படும்போதும், தண்ணீரில் படும்போதும், தரையில் படும்போதும், அந்தந்த பொருட்களின்தன்மைக்கேற்ப ஒளியும், வெப்பமும் மாறுபடுகின்றன என்பதை நாம் அறிவோம்
இதை இன்னொரு எளிய உதாரணத்தில் அவர் விளக்குகிறார். நாம் பூமியிலிருந்து ஒரு 50,000 அடிகளுக்கு மேலே சென்றால், அங்கேயே 0 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான வெப்ப நிலையும்,இருட்டாகவும் இருப்பதைக் காணலாம்.
ஆனால் பூமியில் 35டிகிரி செல்சியஸ், 40 டிகிரி செல்சியஸ் கூட வெப்பநிலை இருக்கிறது. சூரியனிலிருந்து வெப்பம் வருகிறதென்றால் வெளி மண்டலத்தில் வரும் வழியில் மத்தியில் குளிர்ந்து பிறகு சூடு அதிகரிக்குமா? நமக்குக்கிடைக்கக்கூடிய வெப்பமெல்லாம் சூரிய அலை பூமியிலுள்ள பொருட்களின்மீதுப் பட்டு இங்குத் தூண்டப் பெற்றுப் பிரதிபலிக்கக்கூடிய வெப்பமும்,ஒளியும்தான் நாம் சூரியனே வெப்பமும் ஒளியும் தருவதாக உணர்கிறோம்.
சூரியன் ஆறிவியல் .
சூரியன், 73% ஹைட்ரஜன் வாயுக்களால் ஆன நெருப்புக்கோளம் . இதன் மையப்பகுதியில் ஏற்படும் அணுச்சேர்க்கை ( Nuclear Fusion ) காரணமாகஅணுச்சிதைவு ஏற்பட்டு லேசான ஹைட்ரஜன் அணுக்கள் கனமான ஹீலியம் அணுக்களாக மாறிவருகின்றன. ஒரு வினாடிக்கு சூரியனுக்குள் ஏற்படும்அணுச் சேர்க்கைக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் 400 கோடி டன் பயன்படுகிறது ! இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகி அளவு கடந்தவெப்பம் வெளியாகிறது.சூரியனின் மையப்பகுதியில் 14,000,000 செல்சியஸ் அளவில் வெப்பம் அதன் விட்டமான 8,70,000 மைல்களுக்கு அப்பால் அதன்விளிம்பு பகுதிக்கு வரும் போது படிப்படியாகக் குறைந்து 6,000 செல்சியஸாகிறது.
இந்த விளிம்பிலிருந்து சூரியன் ஒளியும் , வெப்பமும் கொண்ட அலை அங்கிருந்துப் புறப்பட்டு 9,30,00,000 மைல்கள் தொலைவிலுள்ள பூமியை வந்தடைய8 நிமிடமும் 18 வினாடிகள் ஆகிறது . (பூமி முட்டை வடிவில் சூரியனைச் சுற்றி வருவதால், இரண்டுக்கும் இடையிலான தொலைவு என வித்தியாசம்ஏற்படும்..)அப்படி வந்தடைந்த சூரிய அலை பூமியில் உள்ள எந்தப் பொருள்மீதுப் படுகிறதோ, அந்தப் பொருட்களின் அணுக்களின் தன்மைக்கு ஏற்பஒளியும் வெப்பமும் தூண்டப்பட்டுப் பிரதிபலிக்கிறது அதாவது சூரியனிலிருந்து வெளிப்படும் அலையின் தன்மையில் அடங்கியிருந்தாலும் அது கல்லில்படும்போது அந்தக் கல்லின் அணுவின் தன்மைக்கும் அதே போல நீரில்,நிலத்தில் எது மீது படுகிறதோ அதில் அடைங்கியுள்ள அணுக்களின்தன்மைக்கேற்பத் தூண்டப்படும் வெப்பத்தின், ஒளியின் பிரதிபலிப்பே நாம் காண்கிறோம் .
கூடுதலான கார்பன் டயாக்சைடை (CO2) சுற்றுச்சூழலில் செலுத்துவதால் ஏற்படுகிறது; அது படிம எரிபொருட்கள் எரிக்கப்படுவதாலும் ஏராளமானகாடுகள் அழிக்கப்படுவதாலும் நிகழ்கிறது.கார்பன் டயாக்சைடைச் சுற்றுச்சூழலில் தேங்குவதுவும் அதி நீக்குவதற்குறிய வழி வகைச் செய்யாததுமே சுற்றுச்சூழலில் அதன் அளவைப் பெரிதும் அதிகரித்துவிட்டது, குறிப்பாகக் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கொலரோடாவில் (Colorado) புவி அமைப்புஆராய்ச்சிச் சோதனைச்சாலை ( Earth System Research Laboratory) பதிவுகளின் படி 1961ஆம் ஆண்டில் இருந்து சுற்றுச்சூழலில் இருக்கும் CO2 மில்லியனுக்கு318 துகள்களில் இருந்து 392 (ppm) என உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. இது தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தையகால அளவை விட 27 சதவிகிதம்அதிகம் ஆகும். கடந்த 650,000 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள வேறு எந்த அளவையும் விட மிகவும் அதிகமாகும்.
இதேபோன்ற தகவல்கள் உயரும் மீத்தேன் அளவுகளைப் பற்றியும் காணப்படுகின்றன. அவை நிலநிரப்பல்கள், கால்நடை, எண்ணெய் எரிவாயுநிலையங்களால் தோற்றுவிக்கப்படுகின்றன. 1750ம் ஆண்டுச் சுற்றுச்சூழலில் மீத்தேனின் எண்ணிக்கைப் பில்லியனுக்கு 700 துகள்கள் (ppb) என்றுஇருந்தது. 2008ல் இந்த அளவுகள் 1,800 ppb என உயர்ந்துவிட்டன. ஒரு நூற்றாண்டில் மீத்தேன் வாயுவின் வெளிப்பாடு CO2 போல் 72 மடங்கு அதிகமாகஉள்ளது.இது ஒருவகையில் தொழிற்புரட்சிக்குப் வந்த பின் எல்லைக் கடந்து அதிகரித்துவிட்டது. மீத்தேன் வாயுவின் அடர்த்தி அதிகரித்து அதிகவெப்பத்தைப் பிடித்து வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. இதுவே முக்கியப் பல பிரச்சினைக்குக் காரணம்.
இது ஒரு முக்கிய உதாரணம் ஆனால் இன்னும் பல காரணம் இருக்கிறது . அதீத மக்கள் தொகைப் பெருக்கமும் ,இயற்கையோடு மனிதக் குலம் உடன்படாத வாழ்வின் பயணமும் ஒரு பக்கம் காரணம்.இதில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் இதற்கெல்லாம் காரணமானஅமெரிக்கா , ஃப்ரான்ஸ் நாடுகளே கோடிக்கணக்கான செலவு செய்து, மரபுசாரா எரிசக்திப் பொறுள் மாற்றம் , பசுங்குடில் விளைவு,மறுசுழற்சி, மறுபயன்பாடு, , போன்ற காரணங்கள் சொல்லிக்கொண்டு புவி வெப்பமயமாதலைத் தடுக்க ஆராய்ச்சி மாநாடுகள் நடத்திக்கொண்டு , உலகின் முதன்மையான சர்வதேச உடன்பாடு கியோடோ நெறிமுறை (The Kyoto Protocol ) வகுத்துக்கொண்டு , பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிக்கொண்டு இருப்பதுதான் மகா வேடிக்கை !
இறைவன் இந்தப் பூமியை மனிதன் அற்புதமான வாழ்வை நடத்தவே பார்த்துப் பார்த்துப் படைத்துள்ளான் அதற்குத் தலைமையகமாக சூரியனை நியமித்துள்ளான் அப்படி இருக்க ’கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி’ என்பது போலப் பூமி வெப்ப மயமாதலுக்குச் சூரியனே காரணமாக இருக்க முடியுமா ? நாம் சிந்திக்க வேண்டும் .அப்படி ஒருவேளை சூரியன் கோபமாக இருந்தால் உடற் குளிர்ச்சி செய்ய நொங்கு , இளநீர் , போன்ற இயற்கை படைப்பை இப்போது அதிகரிப்பது ஏன் ? யோசிக்கலாம்...
No comments:
Post a Comment